உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலமடை கிராமப் பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி விவசாயிகள் அசத்தல்

மேலமடை கிராமப் பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி விவசாயிகள் அசத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலமடை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்து அப்பகுதி விவசாயிகள் அசத்தியுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலமடை கிராமப் பகுதியில் நெல் அறுவடைக்கு பின் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் நெல் தாள்களில் இருந்து மீண்டும் வளர்ச்சியுற்ற பயிர்களை அப்பகுதி விவசாயிகள் சிலர் பாதுகாத்து இரண்டாம் போக நெல் சாகுபடி செய்தனர்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில், அதன் பின்பு தொடர்ந்து நிலவிய கடும் வறட்சியிலும் சாகுபடி செய்யப்பட்ட நெல் விவசாயத்திற்கு பண்ணை குட்டைகள், மற்றும் கண்மாய்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.தற்போது மேலமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது மகசூல் நிலையை எட்டி உள்ளன. தற்போது விவசாயிகள் கண்மாய்களில் இருந்து தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பெரும்பாலான விவசாயிகள் கண்மாய்களில் தண்ணீர் இருந்தும் இரண்டாம் போக நெல் சாகுபடியில் ஆர்வம் செலுத்தாத நிலையில் மற்ற விவசாயிகளுக்கு முன் உதாரணமாக நெல் சாகுபடி செய்துள்ளவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகளும் விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி