உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் வட்டாரத்தில் உழவுப்பணியில் விவசாயிகள்

முதுகுளத்துார் வட்டாரத்தில் உழவுப்பணியில் விவசாயிகள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் டிராக்டரில் நிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர். முதுகுளத்துார் அருகே கீழத்துாவல், காக்கூர், ஏனாதி, சாம்பக்குளம், அப்பனேந்தல், கருமல், நல்லுார், கீரனுார், புளியங்குடி அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில்மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர்.அதன் பின் ஒருசில விவசாயிகள் பருத்தி, மிளகாய், சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்து வந்தனர். சிலர் நெல் விவசாயத்திற்கு பின் நிலத்தை தரிசாக விட்டுள்ளனர். தற்போது கடந்த சில நாட்களாக முதுகுளத்துார் பகுதியில் அவ்வப்போது மழை பெய்தது.நிலங்கள் ஈரப்பதமாக இருந்ததால் விவசாயிகள் உழவு செய்துள்ளனர். முதுகுளத்துார் அருகே காக்கூர், தேரிருவேலி, கீரனுார், நல்லுார், அப்பனேந்தல், கேளல், பொசுக்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் டிராக்டரில் நிலத்தை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர். ஒருசில இடங்களில் பருத்தி விவசாயம் மழையால் பாதிக்கப்பட்டுஉள்ளதால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் நிலத்தை உழவு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை