உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் வாட்டி வதைக்கும் வெயில் மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

பரமக்குடியில் வாட்டி வதைக்கும் வெயில் மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

பரமக்குடி: பரமக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மழையின்றி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் ஒன்றியங்களில் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல் விதைப்பு நடப்பது வழக்கம். இந்நிலையில் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது பண்படுத்தியுள்ளனர்.தொடர்ந்து சில வாரங்களாக சித்திரை மாதத்தில் இருக்கும் கத்தரி வெயில் போல் அனல் காற்று வீசுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வேளாண் விரிவாக்க மையத்திலும் நெல் விதைகள் உட்பட அனைத்து வகை இடுபொருட்களும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இதன்படி மழை கை கொடுக்கும் சூழலில் நெல் விவசாயத்தை துவக்க விவசாயிகள் தயாராக உள்ளனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் நகராட்சி பகுதியை சுற்றி உள்ள விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருகிறது.தொடர்ந்து விவசாயம் செழிக்க வைகை மற்றும் கண்மாய் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் நீர் நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை