உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைகையில் நீர் திறப்பிற்கு விவசாயிகள் வரவேற்பு

வைகையில் நீர் திறப்பிற்கு விவசாயிகள் வரவேற்பு

ராமநாதபுரம்: வைகை அணையில் இருந்து பாசன வசதி பெறும் மூன்று பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கூட்டு குடிநீர் திட்டங்கள், கோடை விவசாயம் பயன் பெறும் என்பதால் விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.வைகை அணையின் பூர்வீக பாசனப்பகுதியில் மூன்றாவது பகுதியானபார்த்திபனுார் மதகணையிலிருந்து ராமநாதபுரம் வரையிலான பகுதிக்கு மே 10 முதல் 14 வரை 915 மில்லியன் கன அடியும்,இரண்டாம் பகுதியான விரகனுார் மதகணையிலிருந்து பார்த்திபனுார் மதகணை வரையுள்ள பகுதிகளுக்கு மே 16 முதல் 19 வரை 376 மில்லியன் கன அடியும், பேரணை முதல் விரகனுார் மதகணை வரையுள்ள முதல்பகுதிக்கு மே 21 முதல் 26 வரை 209 மில்லியன் கன அடி நீரும்திறக்கப்படவுள்ளது.வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால் பெரும்பான்மை கோடை விவசாயத்தில் உள்ள நெற்பயிர்கள், சிறு தானியங்கள் பயன்பெறும். குறிப்பாக வைகை ஆற்றுக்குள் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் பயன் பெறும்.பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது:மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக தண்ணீர் திறக்கும்போதே கோடை விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால்அதிகாரிகள் நீர் வள ஆதாரத்துறை, வேளாண் துறை, குடிநீர் வடிகால்வாரியம், வருவாய்த்துறையினரிடம் அறிக்கை பெற்றனர்.ஒவ்வொரு மாவட்டத்திற்கும்தேவையான தண்ணீர் குறித்து குடிநீர், பாசன தேவை, கண்மாய் நீர் இருப்பு குறித்துதனித்தனியாக அறிக்கை பெற்று தற்போது அரசுக்கு பரிந்துரை செய்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதல்வருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.தற்போது வைகை ஆற்றுப்படுகை ஈரமாக உள்ளது. கோடை மழை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதன் காரணமாக வைகையில் தண்ணீர் திறந்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திறக்கப்படும் நீர் ராமநாதபுரத்திற்கு தங்கு தடையின்றிவந்தடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி