உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகனை கொன்ற தந்தை கைது

மகனை கொன்ற தந்தை கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் குடும்ப பிரச்னையில் மகன் அருண்சிங்கை 28, கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தை ராமச்சந்திரனை 55, போலீசார் நேற்று கைது செய்தனர். ராமநாதபும் அருகே நொச்சிவயலைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி சுந்தரவல்லி 50. கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சென்னையில் வேலை செய்த ராமச்சந்திரனின் இளையமகன் அருண்சிங் 28, மே 26ல் ராமநாதபுரம் வந்தார்.அவர் தந்தை ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று குடும்ப பிரச்னையில் அவருடன் தகராறு செய்தார். அப்போது அருண்சிங்கை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ராமச்சந்திரன் தப்பி ஓடினார். அவரை பஜார் போலீசார் கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை