உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவமனையில் தீயணைப்பு விழிப்புணர்வு

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு விழிப்புணர்வு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலநாதன் தலைமையில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தனர்.முன்னதாக இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துக்கள் உள்ளிட்டவைகளில் செய்ய வேண்டிய முதல் கட்ட நடைமுறைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து சிலிண்டர் தீ விபத்து, கட்டடங்களில் தீ விபத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, முதல் உதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரர்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி