உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் சந்தையில் மீன் விலை பட்டியல்: ஹிந்து மக்கள் கட்சி மனு

ராமேஸ்வரம் சந்தையில் மீன் விலை பட்டியல்: ஹிந்து மக்கள் கட்சி மனு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி மீன் மார்க்கெட்டில் திடீர் விலை உயர்வை தடுக்க நிரந்தரமாக விலை பட்டியல் வைக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.இதுகுறித்து ராமேஸ்வரம் நகராட்சி ஆணையரிடம் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் அளித்த மனு:நகராட்சி மீன் மார்க்கெட்டில் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பயனடையும் வகையில் மீன்கள் விற்ற நிலையில் தற்போது மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி கரை வலையில் சிக்கும் மீன்களுக்கு திடீரென விலையை உயர்த்தி உள்ளனர். இதற்கு காரணம் வெளியூர் மீன் வியாபாரிகள் வாகனங்களுடன் மார்க்கெட்டுக்கு வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.இதனால் மீனுக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் விலையை உயர்த்தி உள்ளனர். உள்ளூர் மக்கள் மீன்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே வெளியூர் வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வருவதை தடுத்து இங்கு நிரந்தரமாக மீன்களுக்கு தரம் வாரியாக விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ