உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காத்தாகுளத்தில் மீன்பிடி திருவிழா

காத்தாகுளத்தில் மீன்பிடி திருவிழா

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையில் கண்மாயில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயத்திற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.தற்போது தண்ணீர் வற்றியதால் மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்தனர். காத்தாகுளம் கிராமத்தில் மக்கள் ஒற்றுமையாக மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.மீன்பிடி உபகரணங்களான கச்சாவலை, ஊத்தா, கூடைகள் உள்ளிட்டவைகளை கொண்டு மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்களை பிடித்தனர். பிடிப்பட்ட மீன்களை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். அவரவர் வீட்டில் சுவாமிக்கு படைத்த பின்பு சாப்பிட்டனர். மீன்பிடித் திருவிழா நடத்துவதால் ஆண்டு தோறும் நல்ல மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை