| ADDED : ஆக 03, 2024 04:43 AM
ராமநாதபுரம்: இன்று(ஆக.3) ஆடிப்பெருக்கு, நாளை ( ஆக.4)ஆடி அமாவாசை, கோயில்விழாக்கள் காரணமாக பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறுபுகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் உள்ளன.ஆடி மாதத்தை முன்னிட்டு கிராம கோயில்களில் திருவிழாக்கள் நடக்கிறது.இதையடுத்து பூக்களை மொத்தமாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள்வாங்கி ராமநாதபுரம் உழவர் சந்தையில் வைத்து விற்கின்றனர்.இன்று (ஆக.3) ஆடிப்பெருக்கு, நாளை (ஆக.4) ஆடி அமாவாசைஎன்பதால் பூக்களின் தேவை அதிகரித்து விற்பனை ஜோராகநடக்கிறது. குறிப்பாக கடந்த மாதங்களில் ரூ.1000 வரை விற்றமல்லிகை வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.600 விற்கிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.