உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுற்றுச்சூழல் கருதி ராமேஸ்வரத்தில் மாட்டு சாணத்தில் விநாயகர் சிலை

சுற்றுச்சூழல் கருதி ராமேஸ்வரத்தில் மாட்டு சாணத்தில் விநாயகர் சிலை

ராமேஸ்வரம் : சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே மண்டபத்தை சேர்ந்த சண்முகம் மாட்டு சாணத்தில் விநாயகர் சிலை வடிவமைத்துள்ளார்.மண்டபத்தை சேர்ந்தவர் சண்முகம் 55. இவர் நாட்டு மற்றும் காங்கேயம் பசு மாடுகளை வளர்த்து பராமரிக்கிறார்.செப்.7ல் விநாயகர் சதுர்த்தியையொட்டி குளம், கடலில் கரைக்கப்படும் சிலைகள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இயற்கை சார்ந்த பொருளில் விநாயகர் சிலை உருவாக்க முடிவு செய்தார்.அதன்படி தன் வீட்டில் உள்ள மாட்டுச்சாணம், மரத்தின் பிசின் பவுடர், கஸ்துாரி மஞ்சள், மாட்டு கோமியம் கலந்து விநாயகர் சிலையை 10 இன்ஞ் முதல் ஒரு அடி வரை வடிவமைத்துள்ளார். இந்த சிலைகள் ரூ.100 முதல் 150 வரை விற்கப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இயற்கை சார்ந்த பொருளில் உருவான விநாயகர் சிலையை வீட்டில் பூஜித்து அதனை நீர்நிலையில் கரைக்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்காது என சண்முகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை