உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரில் கஞ்சா  பதுக்கியவர் கைது

டூவீலரில் கஞ்சா  பதுக்கியவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே டூவீலரில் கஞ்சா பதுக்கிய வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.பஜார் எஸ்.ஐ., செல்லப்பாண்டியன், எஸ்.எஸ்.ஐ., பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அச்சுந்தன்வயலில் இருந்து பேராவூர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் முதுநாள் பகுதியில் டூவலரில் சென்றவரை விசாரித்தனர். அவர் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த சேதுபதி மகன் மூவின்குமார் 22, என்பதும் டூவீலர் பவுச்சில் 1.200 கிலோ கஞ்சா பிளாஸ்டிக் பேப்பரில் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை பசும்பொன் நகர் விக்கி என்ற விக்னேஷ்வரனிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். மூவின்குமாரை கைது செய்த பஜார் போலீசார் விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி