உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

பரமக்குடி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

பரமக்குடி: பரமக்குடி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை ஜோராக நடந்தது.பரமக்குடியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கால்நடைகள் மற்றும் காய்கறி சந்தை நடக்கிறது. பரமக்குடி சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு ஆடுகளை விற்றும், வாங்கியும் வருகின்றனர்.ஜூன் 17 பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு நேற்று பரமக்குடி வாரச்சந்தையில் பல லட்சம் மதிப்பில் பல ஆயிரம் ஆடுகள் விற்பனை நடந்தது.இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ