மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
50 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
50 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
51 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
52 minutes ago
ராமநாதபுரம்:மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளில் புகார் பெட்டி கட்டாயம் வைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமாரி அறிவுறுத்தினார்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தமிழக மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமை வகித்தார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். ஏ.எஸ்.குமாரி பேசியதாவது: பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தக்க ஆலோசனை வழங்கி பிரச்னைகளை தீர்ப்பதற்கு போலீசார் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவிகள் நலன் கருதி கண்டிப்பாக புகார் பெட்டி வைக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் பள்ளி, கல்லுாரி மாணவிகள் விடுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்டறிந்து தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
50 minutes ago
50 minutes ago
51 minutes ago
52 minutes ago