உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் கனமழை; வயல்வெளிகளில் தண்ணீர் தேக்கம்

ஆர்.எஸ்.மங்கலத்தில் கனமழை; வயல்வெளிகளில் தண்ணீர் தேக்கம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான புல்லமடை, வல்லமடை, சிலுகவயல், செங்குடி, சேத்திடல், வாணியக்குடி, பூலாங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. அடுத்த வாரம் நெல் விதைப்பு செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாக இருந்த நிலையில், நேற்று பெய்த மழையால், நெல் விதைப்பு பணி மேலும் சில வாரங்கள் தாமதமாகும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் விளை நிலங்களில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி வயல் வரப்புகளை சீரமைத்தல், வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தற்போது ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை