| ADDED : ஏப் 27, 2024 04:05 AM
மதுரை: ராமநாதபுரம் வக்கீல் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:கடலாடி அருகே உப்பூர்சத்திரம் நுாலக கட்டடங்கள் சேதமைடைந்துள்ளதால் சீரமைக்க வேண்டும். இங்கும், மாவட்டத்திலுள்ள பிற நுாலகங்களிலும் குடிநீர், கழிப்பறை, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலகத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: மாவட்டத்தில்ஒரு மைய நுாலகம், 87 கிளை நுாலகங்களில் அடிப்படை வசதிகள் உள்ளன. கடலாடி நுாலகம் சொந்த கட்டடத்தில் அடிப்படை வசதிகளுடன் இயங்குகிறது. கணினிமயமாக்கப்பட்டுள்ளது. தொண்டி நுாலகத்திற்கு ரூ.50 லட்சத்தில் புது கட்டடம் கட்டுமானம் துவங்கியுள்ளது. உப்பூர் சத்திரம் நுாலகம் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள்: உப்பூர் சத்திரம்நுாலகத்தை சீரமைக்க ஊரக வளர்ச்சித்துறையிடம் மனுதாரர் மனு செய்து தீர்வு காணலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.