மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமநாதபுரம்: கீழக்கரை தாலுகா பெரியபட்டினம் ஊராட்சியில் ஹிந்துக்கள் சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கு ஊர் மக்கள், ஹிந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி தலைமையில் பெரியபட்டினம் ஊராட்சியில் முத்தரையர் நகர் கிராம தலைவர் முத்து, ஊர்மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:முத்தரையர் நகரில் 150 குடும்பங்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறோம். மங்கம்மாள் ரோட்டருகே சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் பெரியபட்டினம் ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் சுடுகாட்டை மண் அள்ளும் இயந்திரத்தை பயன்படுத்தி அழித்து அவ்விடத்தில்மினி ஸ்டேடியம் அரங்கம் அமைப்பதற்கு தேர்வு செய்துள்ளனர்.இது மனித உரிமை மீறலாகும். இது தொடர்பாக கீழக்கரை தாலுகா அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் விசாரணை செய்து சுடுகாடு அமைக்க இடத்தை வழங்க வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago