மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
திருவாடானை: மனைவியின் கள்ளக்காதலன் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை மேற்கு தெருவை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் 26. தொண்டியில் டீக்கடை வைத்துள்ளார். திருமணம் ஆகவில்லை. அதே தெருவை சேர்ந்தவர் மிர்சான் அலி 38. இவர் மீன்பிடி தொழில் மற்றும் கூலி வேலைக்கு செல்வார்.இருவரும் நெருங்கிய நண்பர்கள். மிர்சான் அலி மனைவி செய்யது அலி பாத்திமா 34. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மிர்சான் அலி வீட்டிற்கு முகமது அபுபக்கர் அடிக்கடி செல்வார். அப்போது செய்யது அலிபாத்திமாவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.இதை அறிந்த மிர்சான் அலி மனைவியை கண்டித்தார். இதில் கணவரை விட்டு பிரிந்து செய்யது அலிபாத்திமா தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு மிர்சான் அலி வீட்டிற்கு முகமது அபுபக்கர் சென்றார். இருவரும் மது அருந்தினர்.போதை அதிகமாகவே முகமது அபுபக்கர் வீட்டு முன்பு வாசலில் துாங்கிவிட்டார். அவர் தலையில் மிர்சான் அலி ஆட்டுக்கல்லை துாக்கி போட்டார். தலை நசுங்கி முகமது அபுபக்கர் இறந்தார். திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையிலான போலீசார் மிர்சான் அலியை கைது செய்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago