உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி தேவை இலங்கைக்கு கடத்தும் சட்டவிரோத கும்பல்

மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி தேவை இலங்கைக்கு கடத்தும் சட்டவிரோத கும்பல்

திருப்புல்லாணி: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள், தங்கம்மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலங்கைக்கு கடத்தும் கும்பல் கடந்த மூன்றாண்டுகளாக அதிகளவில் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி முதல் மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், சாயல்குடி, ரோஜ்மா நகர் வரை 120 கி.மீ.,க்கு மன்னார் வளைகுடா கடல் பகுதி அமைந்துள்ளது.துாத்துக்குடி வழியாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நுழையும் சட்டவிரோத கும்பல் இலங்கைக்கு கடத்துவது தொடர்கிறது. இதனை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை போலீசார் உரிய நடவடிக்கை இன்றி உள்ளனர்.ரோந்து செல்லும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க கொள்ளை கும்பல் தங்களது படகில் இருந்து கடத்தல் பொருட்களை கடலில் துாக்கிப் போட்டுவிட்டு எளிதாக தப்பி விடுகின்றனர். 21 தீவுகளை கடந்து சென்றாலும் அவற்றை கண்டறிந்து மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடிய ரேடார் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் சம்பந்தப்பட்ட துறை வசம் உள்ளது.கடலில் ரோந்து செல்லும் மரைன் போலீசார், சுங்கத்துறை போலீசார், போதை தடுப்பு போலீசார் ஒன்றிணைந்து இரும்புக்கரம் கொண்டு கடத்தல்காரர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டும். கூட்டு ரோந்து செல்வது அவசியம்.எனவே தமிழக அரசு இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி