உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

ராமநாதபுரம், ; ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மதுரை வருமான வரித்துறை துணை ஆணையர் மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்ட கருவூல அலுவலர் (பொ) சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.இணையத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறை, காலதாமதமாகவோ, தவறாகவோ அல்லது சரியான தொகையை விட குறைவாகவோ தாக்கல் செய்தால் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.மேலும்சம்பள பட்டியலில் வருமான வரிப்பிடித்தம் குறித்தும், அலுவலர்களின் சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.ராமநாதபுரம் வருமான வரித்துறை அலுவலர்கள் வெங்கடேஷ்வரன், கணேசன், வருமான வரி ஆய்வாளர் உதவி அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை