உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடை வெப்பம் அதிகரிப்பு கிர்ணி பழம் விற்பனை ஜரூர்

கோடை வெப்பம் அதிகரிப்பு கிர்ணி பழம் விற்பனை ஜரூர்

ராமநாதபுரம்: கோடை காலத்தை முன்னிட்டு ராமநாதபுரத்திற்கு திண்டிவனத்தில் இருந்து கிர்ணி(முலாம்) பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கிலோ ரூ.40க்கு விற்கும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.ராமநாதபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மதியம், இரவில் வெப்ப சலனத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக தர்பூசணி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பழங்கள் ஜூஸ், சர்பத், ஜிகர்தண்டா, ஐஸ்கிரீம் ஆகிய குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.இந்த வரிசையில் தற்போது சீசனை முன்னிட்டு திண்டிவனத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு கிர்ணி பழங்கள் அதிகளவில் வந்துள்ளன. உடலில் உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவ குணமிக்க பழம் என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை