உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாம்பழம் விற்பனை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

மாம்பழம் விற்பனை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் மாம்பழம் விற்பனையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலத்தில் வாரந்தோறும் நடக்கும் வார சந்தை மற்றும் மற்ற நாட்களிலும் அதிகளவில் வெளியூர் வியாபாரிகள் மாம்பழம் விற்பனை செய்கின்றனர்.வாகனங்கள் மட்டுமின்றி ரோட்டோர கடைகளிலும் அதிகளவில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த பழங்களாக உள்ளன. இயற்கையாக பழுக்காமல் கார்பைட் கல் வைத்து செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை வாங்கி உண்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று உபாதை ஏற்படுகிறது. இதனால், ஆர்.எஸ்.மங்கலம் பகுதி கடைகள் மற்றும் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை