உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில் துாக்கு பாலம் பொருத்த பாம்பன் கடலில் துாண்கள் ஊன்றும் பணி தீவிரம்

ரயில் துாக்கு பாலம் பொருத்த பாம்பன் கடலில் துாண்கள் ஊன்றும் பணி தீவிரம்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலம் பொருத்த இரும்பு துாண்கள் பொருத்தும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில் பாலம் கட்டுமானப்பணி முழு வீச்சில் நடக்கிறது. இதில் 1.6 கி.மீ., துாரத்துக்கு பாலம் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்தது.மீதமுள்ள 500 மீட்டருக்கு துாண்கள் அமைக்கப்பட்ட நிலையில் பாம்பன் கிழக்கு கடற்கரையில் புதிய துாக்கு பாலம் வடிவமைக்கும் பணி நடந்ததால் இப்பகுதி முழுமை பெறாமல் நிலுவையில் இருந்தது.இந்நிலையில் துாக்கு பாலம் வடிவமைப்பு பணி முடிந்து மார்ச் 12 முதல் மெல்ல நகர்த்தி நடுப்பாலம் அருகில் கொண்டு சென்றனர். இந்த துாக்கு பாலத்தை இரு பாலம் நடுவில் பொருத்தும் போது கடலில் விழாதபடி தாங்கிப் பிடிக்க கடலில் 14 இரும்பு துாண்கள் ரயில்வே பொறியாளர்கள் ஊன்றினர்.மேலும் 6 துாண்கள் ஊன்ற உள்ளதால் இப்படி முடிய மேலும் 10 நாள்கள் ஆகும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை