| ADDED : ஆக 13, 2024 11:37 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்., அக்., மாதம் நடைபெறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது: முதல்வர் கோப்பைக்கான போட்டியில் புதிதாக விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பிரிக்கப்பட்டு ஆண், பெண் இருபாலரும் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் 27 வகையான விளையாட்டுகள் மாவட்ட மற்றும் மண்டல அளவில் வரும் செப்., அக்., மாதங்களில் நடக்கிறது. பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் http://sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் ஆக.,25 மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டிகள் நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.