உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தல் அவசியம்

குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தல் அவசியம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பெற்றோர் சம்மதத்துடன் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் பூர்த்தியான பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற அரசு விதிகளை மீறி சிலர் குழந்தை திருமணங்களை நடத்துகின்றனர். 18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளுக்கு பெற்றோர்களே திருமணம் செய்து வைப்பது தான் வேதனையான செயலாக உள்ளது. எப்போதாவது அதிகாரிகளுக்கு இதுகுறித்த தகவல் கிடைத்தால் மட்டும் நேரில் சென்று குழந்தை திருமணங்களை தடுக்கின்றனர். தெரியாத திருமணங்கள் பல நடந்து கொண்டு தான் இருக்கிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடும் தம்பதியினர் கர்ப்பமுற்ற பின் அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக செல்லும் போது டாக்டர்களிடம் சிக்குகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறார். இதில் சிக்கும் ஆண்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். திருவாடானை, தொண்டி பகுதியில் இரு சிறுமிகளை கர்ப்பமாக்கிவிட்டு அவர்களின் கணவர்கள் வெளிநாடு சென்ற சம்பவங்கள் நடந்துள்ளது.அதிகாரிகள் புகார்கள் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்காமல் அடிக்கடி கிராமங்களுக்கு சென்று இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை