உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு  ஜெயில் 

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு  ஜெயில் 

ராமநாதபுரம், - -பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.ராமநாதபுரம் அருகே காமன்கோட்டையை சேர்ந்த ராமசாமி மகன் கண்ணன் 39. இவர் 2014 ஜூலை 14 ல் பரமக்குடி பஸ்ஸ்டாண்டில் தனது டூவீலரை நிறுத்தியிருந்தார். கருத்தனேந்தல் செல்லும் அரசு பஸ் டிரைவர் அரசு பஸ்சை நிறுத்த வந்துள்ளார்.பஸ் நிறுத்தும் இடத்தில் டூவீலர் நிற்பதை பார்த்து கண்ணனிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் கிடந்த கம்பியை எடுத்து பஸ் கண்ணாடியை உடைத்தார். லோகநாதன் புகாரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு பஸ் கண்ணாடியை உடைத்த கண்ணனுக்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை