உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு

கமுதி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு

கமுதி: கமுதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் தனலெட்சுமி தலைமை வகித்தார். தாசில்தார் சேதுராமன் முன்னிலை வகித்தார். ஜமாபந்தியில் அபிராமம் உள்வட்டம், கமுதி கிழக்கு உள்வட்டம், கமுதி மேற்கு உள்வட்டம், கோவிலாங்குளம் உள்வட்டம், பெருநாழி உள்வட்ட வருவாய் கிராமங்களுக்கு கணக்கு முடிக்கும் பணி நடந்தது.பின்பு பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா கேட்டும் 250க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். ஜமாபந்தியில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை கலெக்டர் தனலெட்சுமி உத்தரவிட்டார். நிறைவு நாளில் 6 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை