உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காமராஜர் பிறந்தநாள் விழா; மாணவர்களுக்கு போட்டி

காமராஜர் பிறந்தநாள் விழா; மாணவர்களுக்கு போட்டி

கமுதி: கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, வடமலையான் மருத்துவமனை, நாடார் மகாஜன சங்கம் இணைந்து மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது.சத்திரிய நாடார் உறவின்முறை டிரஸ்டி தங்கராஜன் தலைமை வகித்தார். அம்பலக்காரர் சக்திவேல், செயலாளர் பாபு செல்வக்கனி முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். மூன்று பிரிவுகளாக பேச்சுப்போட்டி நடந்தது.மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.டிரஸ்டிகள் சிவமுருகன், வெங்கடேசன், கிளை மேலாளர் ஆனந்த், நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் குகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை