உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காமராஜர் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க கூட்டம்

காமராஜர் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க கூட்டம்

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட காமராஜர் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க 20-வது பேரவை கூட்டம் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தில் நடந்தது.சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் குப்புசாமி வரவேற்றார். சங்க வரவு, செலவு கணக்குகளை வாசித்து அங்கீகாரம் செய்யப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் இணைக்கப்பட்டனர்.தொடர்ந்து கைத்தறி தொழிலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நெசவாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் செய்து தர வலியுறுத்தினர். சங்க உறுப்பினர்கள், நெசவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். செயலாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ