உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கேரள அன்னாசி பழங்கள்  ராமநாதபுரத்தில் விற்பனை

கேரள அன்னாசி பழங்கள்  ராமநாதபுரத்தில் விற்பனை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கேரள அன்னாசி பழம் சிறியது 2 பழங்கள் ரூ.30, பெரியது ரூ.50க்கு விற்கப்படுகிறது. கேரளா எர்ணாகுளம், தொடுபுழா, கொட்டாரக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் அன்னாசி பழம் சாகுபடியாகிறது. கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்குவேனில் அன்னாசி பழங்கள் கொண்டு வந்து சிறு வியாாபரிகள் விற்கின்றனர். பழம் வரத்துள்ளதால்சிறியது இரண்டு ரூ.30க்கும், பெரியது ஒன்று ரூ.50க்கும் விற்கின்றனர். மற்ற பழங்களை விட அன்னாசி பழம் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை