மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
11 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
11 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
11 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
11 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வடக்கு மல்லல் கிராமத்தை சேர்ந்த மைக்செட் தொழிலாளி தங்கசாமி. இவரது மனைவி தவசித்ரா, 26. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.இரண்டாவதாக ஜூன் 15ல், உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாதாரண பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷனுக்காக தவசித்ரா, பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஜூலை 17ல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சையின் போது அவருக்கு நாடித்துடிப்பு குறைந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தவசித்ரா நேற்று இறந்தார்.ஆத்திரமடைந்த உறவினர்கள், 'டாக்டர்களின் அஜாக்கிரதையே உயிரிழப்புக்கு காரணம்' என கூறி, ராமேஸ்வரம்- - மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேசியதைஅடுத்து, மறியலை கைவிட்டனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago