உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குருமிலாங்குடி சர்ச் தேர்பவனி

குருமிலாங்குடி சர்ச் தேர்பவனி

தொண்டி : தொண்டி அருகே குருமிலாங்குடி சுவக்கீன் அன்னாள் சர்ச் திருவிழா ஆக.9 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சின்னக்கீரமங்கலம் பாதிரியார் சேவியர் சத்தியமூர்த்தி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. குருமிலான்குடி பாதிரியார் ஜேம்ஸ்ராஜா பங்கேற்றார்.விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. மிக்கேல் அதிதுாதர், பாத்திமா மாதா, சுவக்கீன் அன்னாள் தேர்கள் முக்கிய தெருக்கள் வழியாக சென்று சர்ச்சை சென்றடைந்தது. தேளூர், சித்தம்பூரணி, பழங்குளம், புத்துவயல், தளிர்மருங்கூர் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை