உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / \ பனைமரம் வளர்க்கலாம் வாங்க.. இலவச விதை, தொழில் மேம்பாட்டுக்கு மானியம்: விவசாயிகளுக்கு  தோட்டக்கலைத்துறை வழங்கல்

\ பனைமரம் வளர்க்கலாம் வாங்க.. இலவச விதை, தொழில் மேம்பாட்டுக்கு மானியம்: விவசாயிகளுக்கு  தோட்டக்கலைத்துறை வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் அழிந்து வரும் பனை மரங்களை அதிகரிக்கவும், பனைத் தொழிலை மேம்படுத்தவும் இலவச பனை விதைகள், பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைக்கவும் ரூ.50 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்குகிறது. ராமநாதபுரம், பரமக்குடி, உச்சிபுளி, ராமேஸ்வரம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. பனை ஓலை, குருத்தை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதனீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதனீர், நுங்கு விற்பனை செய்கின்றனர். கிராமங்களில் பல்லாயிரம் பனைமரங்கள் உள்ளன. அவற்றின் குருத்தோலையை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதனீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதனீர், நுங்கும் சீசன் நேரத்தில் விற்கின்றனர். இந்நிலையில் பனை மரங்கள் குறைந்து வருவதால் சிறுதொழில் செய்யும் கைவினைத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் பனை மரங்களை அதிகரிக்கவும், அதனை சார்ந்த கைவினை பொருட்கள் தயாரிப்பு தொழில்களை மேம்படுத்தவும் தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது:மாவட்டத்தில் 1663 எக்டேரில் பனை மரங்கள் உள்ளன. புயல், காற்றில் அதிகம் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது பனை மரம், இதன் தண்டு நார்ச்சத்து நிறைந்தது. மண்ணை நிலைப்படுத்தி மண் அரிப்பை தடுத்து ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. பனை மதிப்புக்கூட்டு பொருட்கள், இதர கைவினைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பனை மேம்பாட்டு இயக்கத் திட்டம் சார்பில் நடப்பு ஆண்டில் பனை விதைகள் 25 ஆயிரம், நாற்றுகள் 280 நுாறு சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதே போல்160 சதுர அடியில் பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைக்க 50 சதவீதம் அதாவது அதிகபட்சம் ரூ.50ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை