உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் நிழற்குடை கட்ட ஆர்வம் மக்கள் கோரிக்கைகளை கேளுங்க

எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் நிழற்குடை கட்ட ஆர்வம் மக்கள் கோரிக்கைகளை கேளுங்க

கீழக்கரை: ராமநாதபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் மூன்று ஆண்டுகளில் அதிகளவில் பயணிகள் நிழற்குடைகள் தான் கட்டப்பட்டுள்ளது.கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு செய்யப்பட்டது.இந்நிலையில் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராம ஊராட்சிகளிலும் கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பயணியர் நிழற்குடை கட்டுவதில் ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது: ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சம் முதல் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அதிகளவில் கட்டப்படும் பயணிகள் நிழற்குடையால் பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்னைகள் கேள்விக்குறியாகவே உள்ளது.முன்பு தடுப்பணைகள் கட்டுவதில் ஆர்வம் காட்டிய ஒப்பந்ததாரர்கள் தற்போது பயணியர் நிழற்குடை மற்றும் கழிவுநீர் வாய்க்கால், உறிஞ்சி குழித்தொட்டிகள் கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பயணியர் நிழற்குடை பெருவாரியான கிராமங்களில் முறையாக சுத்தம் செய்யப்படாமலும் பராமரிப்பின்றியும் உள்ளது.அவற்றை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் துாய்மைப் பணி செய்ய அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்னையான குடிநீர், சாலை வசதி, சேதமடைந்த மின்கம்பம் உள்ளிட்டவைகள் குறித்து மக்கள் வழங்கும் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமங்கள் தோறும் மனு கொடுப்பதற்காக அதிகளவில் மக்கள் செல்லும் நிலையில் பிரச்னைக்கு தீர்வு காண தொகுதி எம்.எல்.ஏ., முன்வர வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை