உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்

குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தை பகுதியில் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் கிடந்ததால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரமக்குடி சட்டசபை தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பித்து வருவதுடன், பிழை திருத்தம் செய்யவம் மனுக்கள் அளித்து வருகின்றனர்.கடந்த லோக்சபா தேர்தலின் போது புதிய வாக்காளர் அட்டை கேட்டு விண்ணப்பித்த பலருக்கு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும் வாக்காளர் அடையாள அட்டைகள் வரவில்லை. இதுகுறித்து தேர்தல் பிரிவிலும் முறையான பதில் இல்லை. இந்நிலையில் நேற்று பரமக்குடி உழவர் சந்தை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீசப்பட்டு கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தெரிவித்தனர். வருவாய் அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்