உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை

ராமேஸ்வரம்,:-ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலம், 1914ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலவீனமாகி, 2020 ஜனவரியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி, 550 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது.மொத்தம், 2.1 கி.மீ., புதிய பாலத்தின் நடுவில் துாக்கு பாலம் பொருத்த, 650 டன்னில் பாலம் வடிவமைத்து ஜூலை 27ல் பாலத்தின் நடுவே வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அதன் பின் துாக்கு பாலத்தை தொழில்நுட்ப ரீதியாக நேற்று முன்தினம் இரு பாலத்திலும் ரயில்வே பொறியாளர்கள் பொருத்தினர். கடந்த 55 மாதங்களுக்கு பின் பாலம் கட்டுமான பணி நிறைவு பெற்றதால், நேற்றிரவு, 7:10 மணிக்கு முதன்முதலாக புதிய பாலத்தில் ரயில் ஆய்வு இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததால், ரயில்வே பொறியாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.இன்னும் சில நாட்களுக்கு பின் புதிய துாக்கு பாலம் லிப்ட் முறையில் இயக்கப்படும். பின், அடுத்தடுத்து ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, அக்., 1ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை