மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மீசல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டடத்திற்கு நிதியுதவி அளித்த மலேசிய தொழிலதிபர் முகமது ரபிசேட்டை கிராம மக்கள் வரவேற்றனர்.மீசல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். போதுமான வகுப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் படித்தனர்.கிராம மக்கள் பலமுறை மனு அளித்ததால் நமக்குநாமே திட்டத்தில் ரூ.19.20 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு நிதியை கிராமத்தின் சார்பில் அளிக்க வேண்டும். இதையடுத்து கிராம மக்கள் சார்பில் அரசு பள்ளி கட்டடத்திற்கு நிதியுதவி அளிப்பதற்காக மலேசிய தொழிலதிபர் முகமது ரபிசேட் கிராமத்தின் சார்பில் முழுத் தொகையை அளித்துள்ளார். மேலும் கூடுதலாக ரூ.4 லட்சம் சேர்த்து ரூ.10 லட்சம் அளித்துள்ளார்.தற்போது புதிய வகுப்பறை கட்டடத்தின் திறப்பு விழா நடந்தது. மலேசியா தொழிலதிபர் முகமது ரபிசேட் மீசல் கிராம மக்கள் ஒன்றிணைந்து மத சமூக ஒற்றுமையுடன் கும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்து புதிய கட்டடம் திறக்கப்பட்டது. பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago