உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முளைப்பாரி ஊர்வலத்தை  வரவேற்ற முஸ்லிம்கள் மத நல்லிணக்க விழா

முளைப்பாரி ஊர்வலத்தை  வரவேற்ற முஸ்லிம்கள் மத நல்லிணக்க விழா

ராமநாதபுரம், : ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு விழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர்.ராமநாதபுரம் புளிக்காரத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முளைக்கொட்டு விழா நடக்கிறது. ஆக.6ல் அம்மனுக்கு காப்பு கட்டி முத்துபரப்புதல் நடந்தது. நேற்று முன்தினம் (ஆக.13) அபிேஷக பூஜைகளும், இரவு அம்மன் அலங்கார ரதத்தில் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். நேற்று(ஆக.14) மாலை 4:30மணிக்கு நொச்சியூருணியில் பூஜை செய்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். சின்னக்கடை வீதி வழியாக வந்த போது பாசிப்பட்டறை ஜமாத் நிர்வாகம் மற்றும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.பக்தர்களுக்கு சால்வை அணிவித்தும், குளிர்பானங்கள் வழங்கியும் மரியாதை செய்தனர். இதயைடுத்து முத்துமாரியம்மனுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை