| ADDED : மே 26, 2024 11:02 PM
சாயல்குடி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சாயல்குடி வி.வி.ஆர்.நகரில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.சாயல்குடி பேரூராட்சி வி.வி.ஆர்., நகரில் 3000பேர் வசிக்கின்றனர். 2002ல் கட்டப்பட்ட 30 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து இருந்தது. குறைந்த அளவிலேயே தண்ணீர் விநியோகம் செய்தனர். பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய தொட்டியை அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.15 லட்சத்தில் 60 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டி வி.வி.ஆர்., நகரில் அமைக்கப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர் காமராஜ் கூறியதாவது: காவிரி நீர் மற்றும் ஐந்து ஏக்கர் பகுதியில் இருந்து தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கும், தினமலர் நாளிதழுக்கும் நன்றி என்றார்.