உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சின்னக்கீரமங்கலத்தில் புதிய அரசு அலுவலக கட்டடங்கள்

சின்னக்கீரமங்கலத்தில் புதிய அரசு அலுவலக கட்டடங்கள்

திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டத் துவங்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருவாடானை தாலுகா தலைமையிடமாக உள்ளது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, டி.எஸ்.பி. அலுவலகம், பொதுப்பணித்துறை என பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன. ஆனால் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான அரசு புறம்போக்கு இடம் இப்பகுதியில் இல்லை.புதிய கட்டடங்கள் கட்ட அரசால் நிதி ஒதுக்கப்படும் போது போதுமான இடம் இல்லாததால் மாற்று இடம் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் திருவாடானை அருகே பெரிய கீரமங்கலம் ஊராட்சி சின்னக் கீரமங்கலத்தில் அரசு புறம்போக்கு இடம் இருப்பதால் அப்பகுதியில் கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பெண்கள் போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்ற அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. தற்போது ரூ.2 கோடி செலவில் சிறைச்சாலை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தொழில் வளர்ச்சியில் சின்னக்கீரமங்கலம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் புதிய அரசு கட்டடங்களும் கட்டத் துவங்குவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் சின்னக்கீரமங்கலத்தில் நிலம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை