உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடியில் புதிய மணல் திட்டு

தனுஷ்கோடியில் புதிய மணல் திட்டு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புயலில் இடிந்த கட்டடங்கள், கடல் அலைகளை கண்டு ரசிக்கின்றனர். இதனால் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால், தனுஷ்கோடி தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகின்றன. இச்சூழலில் அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா வடக்கு பகுதியில் திடீரென 200 மீ., சுற்றளவில் மணல் திட்டு உருவாகியுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணியர் நின்ற படி கடல் அழகை ரசித்து ஆர்வமுடன் 'செல்பி' எடுத்தனர்.பருவ கால மாற்றத்திற்கு ஏற்ப ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற மணல் திட்டுகள் உருவாகும். ஆனால், அரிச்சல்முனை வடக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பின், மணல் திட்டு உருவாகியுள்ளது என, தனுஷ்கோடி மீனவர் உமையவேல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ