உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லை: நெருக்கடியில் மாணவர்கள்

அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லை: நெருக்கடியில் மாணவர்கள்

தொண்டி, நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.தொண்டி அருகே நம்புதாளையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 494 மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது இரு வகுப்பறை மட்டுமே உள்ளது. அதிகப்படியான மாணவர்கள் இந்த வகுப்பறைகளில் இருப்பதால் பாடம் நடத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி மேலாண்மை குழு தலைவி பாண்டிசெல்வி, பெற்றோர் சங்க தலைவர் கண்ணன் கூறியதாவது:கூடுதல் வகுப்பறை இல்லாததால் மாணவர்களை பள்ளியில் உள்ள நுாலகம் உள்ளிட்ட அறைகளில் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். இதனால் மாணவர்களுக்கு கவனச்சிதறல்கள் ஏற்படுகிறது. பள்ளி அருகே பயன்படாத அங்கன்வாடி கட்டடம் உள்ளது.அக்கட்டிடத்தை அகற்றிவிட்டு கூடுதல் வகுப்பறைக்கான புதிய கட்டடம் கட்டலாம். 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாற்காலி வசதியில்லை. தரையில் அமர்ந்து படிப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை