உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன் மார்க்கெட்டில் பயன்பாடு இல்லாத கழிப்பறை வளாகம்

மீன் மார்க்கெட்டில் பயன்பாடு இல்லாத கழிப்பறை வளாகம்

கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சி மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பயன்படாத நிலையில் பல மாதங்களாக பூட்டியுள்ள கழிப்பறை வளாகம் புதர் மண்டியுள்ளது.ஏர்வாடி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மீன்மார்க்கெட்டிற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் மீன் விற்க, வாங்க வந்துசெல்கின்றனர். இவர்கள் வசதிக்காக ரூ.பல லட்சம் செலவில் கழிப்பறை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகள் பலமாதங்களாக பூட்டியுள்ளன. சுற்றி முட்செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதனால் வியாபாரிகள், மீனவர்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை