| ADDED : மே 26, 2024 12:42 AM
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே காமன்கோட்டையை சேர்ந்தவர் சாந்தி, 45. இவரிடம் நேற்று முன்தினம் மாலை வட மாநில இளைஞர்கள் மூவர் தங்க நகைகளை பாலீஷ் செய்து தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினர். அதை நம்பி, அவர் தந்த ஐந்து சவரன் தாலி செயினை பெற்றுக் கொண்ட மூவரும் ரசாயன பவுடரில் நகைகளை தேய்த்துள்ளனர். அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சாந்தி அருகில் இருந்த உறவினர்கள் வாயிலாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.அங்கு சென்ற சத்திரக்குடி போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதேஷ்குமார், 21, ரஞ்சித்குமார், 28, மற்றும் 15 வயது சிறுவன் என தெரிந்தது. பெண்ணிடம் மேசடியில் ஈடுபட முயற்சித்த நிதேஷ்குமார், ரஞ்சித்குமாரை ராமநாதபுரம் சிறையிலும், சிறுவனை மதுரை சிறார் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.