உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிடித்தம் செய்த பணத்தை வழங்க சத்துணவு ஓய்வூதியர் கோரிக்கை

பிடித்தம் செய்த பணத்தை வழங்க சத்துணவு ஓய்வூதியர் கோரிக்கை

ராமநாதபுரம் : நடப்பாண்டில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்களில் விடுபட்டவர்களுக்கு பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக வழங்கவேண்டும் என அரசு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்சங்கம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கார்த்திகேயன்கூறியிருப்பதாவது: ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்குபிடித்தம் செய்த பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் 11 யூனியன்களில் 10ல் வழங்கி விட்டனர். ஆனால்ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் அரசு உத்தரவை மதிக்காமல் சத்துணவு மேலாளர் இதுவரை வழங்கவில்லை.அங்கும் உடனடியாக வழங்க வேண்டும்.இல்லை ஏனில் இதனை கண்டித்து ஆக.20ல் மாநிலபொச்செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம்யூனியன் சத்துணவு மேலாளரை கண்டித்து காத்திருப்புபோராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ