மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
11 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
11 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
11 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
11 hour(s) ago
திருப்புல்லாணி: -கண்மாய், குளங்களில் வரையறுக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சவடு, மண்டல் மண் அள்ளுவது அதிகரிக்கும் நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலங்களை சமன்படுத்தும் வகையிலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காகவும் வண்டல் மண் எடுக்க கனிம வளம் மற்றும் வருவாய்த்துறை அனுமதி அளிக்கிறது. இதை பயன்படுத்தி குளங்களில் அதிகளவு மண் எடுத்து தனி நபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் இடங்களில் பயன்படுத்துகின்றனர்.கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக திருப்புல்லாணி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகளிலும் குறிப்பிட்ட இடங்களில் ஊருணி மற்றும் குளத்துக்கரை பகுதிகளில் வண்டல் மண் மற்றும் சவடு மண் டிராக்டர்களில் எடுத்துச் செல்கின்றனர்.அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக மண் எடுப்பதால் நீர்நிலைகளில் பெரும்பாலான இடங்களில் பள்ளம் அதிகரித்து வருகிறது. திருப்புல்லாணியை சேர்ந்த மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:தற்போது இயந்திரங்களை பயன்படுத்தி டிராக்டர்களில் அதிகளவு சவடு மண் எடுக்கின்றனர். அவற்றை ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு கொடுக்கின்றனர். மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரம் செழிப்பதற்கான திட்டத்தின் நோக்கம் ஊராட்சிகளில் கேள்விக்குறியாக உள்ளது.திருப்புல்லாணி ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் ஊருணி கரைகளை பலப்படுத்தாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் போக்கால் கனிம வளக் கொள்ளை நடக்கிறது. எனவே வருவாய்த்துறை, கனிம வளத்துறையினர், போலீசார் இணைந்து தணிக்கை செய்ய வேண்டும் என்றார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago