| ADDED : ஆக 05, 2024 10:45 PM
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்தவர் கிராமிய பாடகி அபிராமி, 28. இவர் சிதம்பரத்தில் நிகழ்ச்சியை முடித்து விட்டு, நேற்று அதிகாலை தன் குழுவினருடன் தேவகோட்டை வந்தார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கைகாட்டியிலிருந்து கார்த்திக், 31, உட்பட சிலர் சென்னைக்கு காரில் சென்றனர். திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அமராவதி புதுார் அருகே வந்த போது இரு கார்களும் மோதிக்கொண்டன.இதில், திருவாடானையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த மணக்குடி சக்தி, 25, திருவாடானை பழனிவேல், 28, முனிராஜ், 31, ஹரிஹரன், 22, ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றொரு காரில் வந்தவர்களில் பாடகி அபிராமி மட்டும் காயமடைந்தார்.சோமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.