உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்காணிக்க ஆய்வுக்குழு அமைப்பு

கண்காணிக்க ஆய்வுக்குழு அமைப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல்நிலையங்களை கண்காணிக்க தாலுகா வாரியாக வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வேளாண் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இவை செயல்படுகிறது. விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்கின்றனர். கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து கண்காணிக்க வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வேளாண் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் அடங்கிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு உறுப்பினர்கள் தற்சமயம் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அய்வு செய்கின்றனர். விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் எந்தவித இடையூறுமின்றி சந்தை விலையை விட கிலோவிற்கு கூடுதலாக ரூ.5 வரை விற்று பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ