உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் விழாவில் எருதுகட்டு

கோயில் விழாவில் எருதுகட்டு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் கிராமத்தில் காளியம்மன் கோயில் விழாவில் எருதுகட்டு நடந்தது.இதனை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் சிலாக்குத்துதல், ஆயிரம்கண் பானை,வேல்குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். காளியம்மனுக்கு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருதுகட்டு விழா நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 30 காளைகள் கொண்டுவரப்பட்டது.முன்னதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு, பின்பு வடத்தில் கட்டப்பட்டுள்ள காளைகளை வீரர்கள் பிடித்தனர். வென்ற காளைகள், வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கீழத்துாவல் மக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி