உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பங்குனி பிரமோற்ஸவம் நிறைவு; சேதுக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

பங்குனி பிரமோற்ஸவம் நிறைவு; சேதுக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள், அனுமார் வாகனத்தில் ராமபிரான் எழுந்தருளி சேதுக்கரை கடற்கரைக்கு சென்றனர். சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் சன்னதி அருகே கல்யாண ஜெகநாத பெருமாள், ராமபிரான், சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமாலை கோஷ்டி பாராயணம் நடந்தது.முன்னதாக சக்கரத்தாழ்வாருக்கு சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சேதுக்கரையில் இருந்து மாலை 5:30 மணிக்கு அனுமன், கருடாழ்வார் வாகனத்தில் புறப்பட்ட உற்ஸவமூர்த்திகள் திருப்புல்லாணி கோயிலை வந்தடைந்தனர். அங்கு இரவு 7:00 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் உற்ஸவ மூர்த்திகளின் வீதியுலா நடந்தது. நாளை (மார்ச் 28) உற்ஸவ சாந்தி பூஜையுடன் பங்குனி பிரம்மோற்ஸவம் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ