உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி நான்கு வழிச் சாலை மேம்பாலம் கீழ் சீமைக்கருவேலம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பரமக்குடி நான்கு வழிச் சாலை மேம்பாலம் கீழ் சீமைக்கருவேலம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பரமக்குடி: பரமக்குடி நான்கு வழிச் சாலை பாலத்தின் கீழ் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.மதுரையில் இருந்து பரமக்குடி அருகே அரியனேந்தல் வரை ராமநாதபுரம் ரோடு நான்கு வழிச்சாலையாக உள்ளது. இந்நிலையில் பரமக்குடி எல்லையில் தெளிச்சாத்தநல்லுார் பகுதியில் நான்கு வழிச்சாலையில் இருள் சூழ்ந்திருந்தது.இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அங்கு ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டன. இதே போல் அரியனேந்தல் பகுதியிலும் மின்விளக்கு வசதியின்றி இருளில் மூழ்கியுள்ளது.அப்பகுதியில் நான்கு வழிச் சாலை நிறைவடையும் இடத்தில் மேம்பாலம் உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் பரமக்குடி வழியாக அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஆனால் அப்பகுதி இருளில் உள்ளதுடன் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காடு போல் உள்ளது.இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் மேம்பாலத்தை ஒட்டி மரங்கள் வளரும் நிலையில் பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி வருகிறது.ஆகவே சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதுடன் ஹைமாஸ் விளக்குகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்